முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
Published on

சென்னை,

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாச்சலம். அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அளித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார்.

பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை.

அதன் பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவும், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர், தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் அவரின் ஆதரவாளர்கள் 905 பேரும் திமுகவில் இணைந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com