முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மரணம்; உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

சேரன்மாதேவியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை இறந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மரணம்; உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
Published on

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் வரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வேல்துரை. இவர் 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான வேல்துரை நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 73. இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும், வி.பி.துரை என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.வேல்துரை உடலுக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி., ஞானதிரவியம் எம்.பி., ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், கே.பி.கே.ஜெயகுமார், வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன், எஸ்.கே.எம்.சிவகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். வேல்துரையின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாகுளத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com