ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைகிறார்


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைகிறார்
x
தினத்தந்தி 22 Jan 2026 7:20 AM IST (Updated: 22 Jan 2026 7:23 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளார்.

பெரம்பலூர்,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் நேற்று தி.மு.க.வில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் சென்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகத்தின் ஜெயலலிதா பேரவை செயலாளரும், குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி நம்மை இணைத்து கொள்ளாத பட்சத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் எங்களிடம் கடந்த மாதம் 23-ந் தேதி கருத்து கேட்டிருந்தார். நாங்கள் எல்லாம் அவரவர் கருத்துகளை கூறியிருந்தோம். இதற்கிடையே, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், சசிகலா ஆகியோரை கட்சியில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இறுதியாக அறிவித்தார்.

இந்த நிலையில், வைத்திலிங்கம் எங்களை அழைத்து தி.மு.க.வில் இணைவதாக தெரிவித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். வருகிற 26-ந்தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் தலைமையில் வைத்திலிங்கம் முன்னிலையில் எங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story