கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து முன்னாள் ஊழியர் பலி

கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து முன்னாள் ஊழியர் பலியானார்.
கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து முன்னாள் ஊழியர் பலி
Published on

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து முன்னாள் ஊழியர் பலியானார்.

மின்சாரம் தாக்கி பலி

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74). இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு நடந்து சென்றார்.

அப்போது தென்னை மரம் விழுந்ததில், மின் கம்பி அறுந்து இரும்பு முள்வேலியில் விழுந்தது. அதை கவனிக்காத ஜாஸ்பர் செல்வகுமார் முள்வேலியை தொட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஜாஸ்பர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜாஸ்பர் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் தொட்டதால் பஞ்சாயத்து முன்னாள் ஊழியர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com