முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரங்கசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரங்கசாமி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரங்கசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி குறிப்பில்,

முன்னாள் டிஜிபி திரு. ரங்கசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மாநிலக் காவல்துறையைச் சிறப்பாக வழிநடத்திய அவரது திறன் காவல்துறையினரால் என்றென்றும் நினைவுகூரப்படும்.

திரு. ரங்கசாமி அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com