முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தமளிக்கிறது - த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தமளிக்கிறது - த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
Published on

சென்னை,

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். பிரதமராவதற்கு முன்பு, 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற சேவைகளுக்கு அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com