முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: ஜோதிமணி எம்.பி. புகழஞ்சலி

நவீனமான வளர்ச்சி மிகுந்த இந்தியாவிற்கு வலுவான அடித்தளமிட்டவர் நேரு என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: ஜோதிமணி எம்.பி. புகழஞ்சலி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியாவை உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடாக உருவாக்கியவர். நவீனமான வளர்ச்சி மிகுந்த இந்தியாவிற்கு வலுவான அடித்தளமிட்டவர். தெருவெங்கும் தெய்வங்கள் நிறைந்த தேசத்தில் தான் வாழும் காலம் வரை மக்களின் மாறாத அன்பைப் பெற்ற பிரதமராக பொறுப்பு வகித்த நாத்திகர். ஆனால் மற்ற அனைவரின் நம்பிக்கைகளையும் மதித்துப் போற்றிய அப்பழுக்கற்ற ஒரு ஜனநாயகவாதி.

IIT,IIM,AIIMS,DRDO,ISRO என்று எத்தனையோ கனவுகளை தனது தொலைநோக்குச் சிந்தனைகள் மூலம் கட்டி எழுப்பியவர். அறிவியல்,விஞ்ஞானம்,இலக்கியம்,கலை என்று அவர் அறியாத துறைகளே இல்லை.

தனது வாழ்வின் இளமைக்காலத்தின் பெரும்பகுதியை இந்திய சுதந்திரபோராட்டத்திற்காக சிறையில் கழித்த சுதந்திரப்போராட்ட தியாகி.

நேருவின் கனவும்,தொலைநோக்குச் சிந்தனையும், ஜனநாயகத்தன்மையும்,சமரசமற்ற கொள்கை நிலைப்பாடும் தான் இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு மதிப்புமிகுந்த இடத்தைப் பெற்றுத் தந்தது. அவரது நினைவுநாளில் எனது இதயாஞ்சலி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com