முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் "இட ஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி. சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி. சிங் அவர்களது சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார். என தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com