முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 91 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
image tweeted by @mkstalin
image tweeted by @mkstalin
Published on

சென்னை,

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 91 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் குறித்து டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் பிறந்தநாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்! இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com