

சென்னை,
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்தியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள்!
இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் வி.பி.சிங். அன்று அவரை Great எனத் தமிழ்நாடும், தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள்.
தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதல்-அமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை 'Greatest Of All Time' எனக் கொண்டாடத் தோன்றுகிறது.
பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.