முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்துள்ளதால் தற்போது இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) அகிலா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com