நுண்ணீர் பாசனம் அமைக்க அழைப்பு

நுண்ணீர் பாசனம் அமைக்க அழைப்பு
நுண்ணீர் பாசனம் அமைக்க அழைப்பு
Published on

பொங்கலூர்

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திற்கு 115 எக்டேருக்கு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஷர்மிளா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கலூர் வட்டாரத்தில் விவசாயிகள் காய்கறி பயிர்களான தக்காளி, வெங்காயம், மிளகாய், பந்தல் காய்கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்யது வருகிறார்கள். இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீர் நேரடியாக வேர் பகுதியை சென்றடைவதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே இது போன்று சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக ஒரு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 855-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530 வழங்கப்பட உள்ளது.

எனவே நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், உரிமைச் சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ்புத்தக்கத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் பொங்கலூரில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் மற்றும் தோட்டுக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

----------------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com