சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்கியது

பார்முலா4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டிரீட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை தகுதி சுற்று போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில், பார்முலா 4 கார் பந்தய பிரதான ரேஸ் போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. கார் பந்தயத்தை நடிகர் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டுகளிக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com