பார்முலா 4 கார் பந்தயம்: நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதில் உற்சாகம். நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டாகவும் மாற்றியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com