மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

சிவகிரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே ராமநாதபுரம் பஞ்சாயத்து சரவணாபுரம் கிராமத்தில் ரூ.9.40 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com