கடையம் அருகே புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையம் அருகே புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கடையம் அருகே புதிய கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள மந்தியூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், ஊர் நாட்டாமைகள் சுந்தர், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com