சுரண்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

சுரண்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சுரண்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சி 23-வது வார்டு பகுதியில் ரூ.9 கோடியே 45 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி, பொறியாளர் ஹரிஹரன், தி.மு.க. நகர செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் வள்ளியம்மாள் ஆறுமுகசாமி பாண்டியன் வரவேற்றார். பழனிநாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதில் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுநிலை எழுத்தர் முருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com