நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

நெல்லை,

நெல்லை அடுத்த சுத்தமல்லி, கொண்டா நகரம், ராஜீவ் காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த 6 மோட்டார் சைக்கிள்களை வெவ்வேறு நாட்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

6 பேர் புகார்

இதுகுறித்து கொண்ட நகரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ரஞ்சித் (வயது 30), சிவசக்தி நகரை சேர்ந்த பூதத்தான் மகன் மகாராஜன் (56) உள்ளிட்ட 6 பேர் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் அடங்கிய குழுவினர் தொடர் திருட்டில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆங்காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

அதில் தொடர் திருட்டில் தொடர்புடைய பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் மகன் இசக்கி ராஜா (19), உகந்தான் பட்டியை சேர்ந்த செல்வகுமார் மகன் அருணாச்சலம் (19) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com