சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனா தடுப்பு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனா தடுப்பு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனா தடுப்பு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.

கடந்த ஜூலை 20 ம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேரும் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேரும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com