சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 போலீசார் கைது

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 போலீசார் கைது
Published on

சென்னை,

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ்உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஏற்கனவே கைதான நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் காவலர்களிடம் விசாரணை நடந்த நிலையில், சிபிசிஐடி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com