இந்திய ராணுவத்தில் சேர்ந்த நான்காம் தலைமுறை பெண் அதிகாரி

இந்திய ராணுவத்தில் சேர்ந்த நான்காம் தலைமுறை பெண் அதிகாரி

ராணுவத்தின் நெறிமுறைகள், ஒழுக்கம் மற்றும் மதிப்புகளால் பிரஞ்சல் நங்கரே ஆழமாக ஈர்க்கப்பட்டு வளர்ந்தார்.
Published on

சென்னை,

லெப்டினன்ட் பிரஞ்சல் நங்கரே சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) இந்திய ராணுவ படைக்கலப் பிரிவில் நேற்று சேர்ந்தார். இதன்மூலம் அவர் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலைமுறை அதிகாரியானார்.

லெப்டினன்ட் பிரஞ்சல் தனது குடும்பத்தில் பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் 15-வது உறுப்பினராகவும், ராணுவத்தில் சேரும் 13-வது நபராகவும், தமது குடும்பத்தின் முதல் பெண் அதிகாரியாகவும், திகழ்கிறார்.

லெப்டினன்ட் பிரஞ்சல், இந்திய ராணுவத்தின் தெற்கு ஆணையகத்தில் பணிபுரியும் மேஜர் ஜெனரல் பராக் நங்கரேவின் மகள் ஆவார். அவர் ராணுவத்தின் நெறிமுறைகள், ஒழுக்கம் மற்றும் மதிப்புகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டு வளர்ந்தார்.

சிறுவயதிலிருந்தே தைரியம், தியாகம் மற்றும் சேவை பற்றிய வரலாறுகளை கேட்டு பார்த்து வளர்ந்த அவருக்கு ராணுவ சீருடை அணியும் எண்ணம் உருவானது. ஊடகத் துறையில் முதலில் கால்பதித்த போதிலும், லெப்டினன்ட் பிரஞ்சல் தனது இளம்பருவ கனவாகிய ராணுவ சேவையை தற்போது நனவாக்கியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com