கோவையில் பிராங்க் வீடியோ எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

கோவையில் பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் யூடியூப் சேனல் முடக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவையில் பிராங்க் வீடியோ எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை
Published on

கோவை,

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப தற்போது யூடியூப் சேனல்களும் அதிகரித்து விட்டன.

யூடியூபில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில சில பதிவுகள் மக்களை அதிருப்தியடைய வைக்கிறது. அதாவது பிராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லை செய்யும் விதமாக சிலர் துன்புறுத்தும் விதமாக வீடியோ எடுத்து அவர்களிடம் கேட்காமல் வெளியிடுகின்றனர்.

இதனை யூடியூபில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கலாம்.

ஆனால் இந்த ப்ராங்கை பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தி அவர்களின் சுதந்திரத்தை கெடுக்கின்றனர்.இது போன்று பதிவிடுவது தனிமனித சுதந்திரத்தை கெடுக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுத்து யூடியூப் சேனல் முடக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. அதாவது, குறும்புத்தனமாக வீடியோ எடுக்கிறோம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் பாதிப்பு உண்டாகும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com