

சென்னை,
கோவை பெரியார் அறிவுலகம் நூலக மோசடி. தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
கோயம்புத்தூர் காந்திபுரத்தில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 7 தளங்களுடன், ஏறத்தாழ ரூபாய் 300 கோடி செலவில் பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம் கடந்த ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கபட்டது. அண்மையில் இதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இதில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களுக்கு வாங்கப்பட்ட நூல்களில் முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் சுட்டி காட்டியுள்ளார்.
வாங்கப்பட்ட நூல்களிலும் ஏராளனமான தவறான விவரங்கள், வரலாற்று பிழைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அந்த நூலகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாரானால் மிகப்பெறும் பாதிப்புகளே தேர்வர்களுக்கு உருவாகும்.
எனவே, உடனடியாக இம்முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.