

கொழிஞ்சாம்பாறை:
திருச்சூர் நகரை சேர்ந்தவர் சுனில் (42). பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சபிதா (24). தேவி ((26). கார்த்திகேயன் (31). இவர்கள் 4பேரும் கடந்த மாதம் ஒரு தமிழ் பேப்பரில் மணமகன் தேவை என விளம்பரம் செய்து இருந்தார்கள்.
அந்த விளம்பரத்தில் வந்த செல்போன் நம்பருக்கு சேலம் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போன் செய்தார். தனக்கு பெண் தேவை எனவும் தெரிவித்தார்.
அப்பொழுது நான்கு பேரும் பாலக்காடு நகரம் கொழிஞ்சாம்பாறை வந்து பெண்ணை பார்த்து செல்லுங்கள் என அழைப்பு விடுத்தார்கள். அவர் தமது நண்பர்களுடன் பெண் பார்க்கும படலத்தை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வோம் என கூறி மன மகளை பார்த்து விட்டு சென்றார்கள்.
பின்பு கடந்த வாரம் நான்கு பேரும் கொழிஞ்சாம்பாறை வாருங்கள் 12ஆம் தேதி திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தேதி குறிப்பிட்டு தகவல் அனுப்பினார்கள்.
அந்தத் தேதியில் சேலத்திலிருந்து மணிகண்டன் கொழிஞ்சாம்பாறை பகுதிக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்களும் சிலர் வந்தார்கள் அன்று கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
மணமகள் பெயர் சபிதா. பின்பு மணமகளை சேலத்துக்கு தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மணிகண்டன் கூறினார்.அதற்கு கார்த்திகேயன் மற்றும் இரண்டு பேரும் புதிய பெண் என்பதால் அந்த பெண்ணுக்கு இடம் புதிது என்பதாலும் ஒரு நாள் மட்டும் நாங்களும் வருகிறோம் எனக் கூறி சென்றார்கள்.
அங்கு சென்று விட்டு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்த கமிஷன் தொகை ஒன்றரை லட்சம் ரூபாய் தேவை என கார்த்திகேயன் கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டனும் சம்மதித்து ஒன்றரை லட்சம் ரூபாயை கார்த்திகேயன் அன்று இரவு ஒப்படைத்தார்.
மறுநாள் காலையில் சவிதாவின் தாயார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் எந்த நேரத்திலும் அவர் உயிர் பிரிந்து விடும் மகளைப் பார்க்க வேண்டுமென சபீதாவின் தாயார் விரும்புகிறாள் என போன் வந்திருப்பதாக கார்த்திகேயன் கூறினார்.
அதை நம்பிய மணிகண்டன் மனம் இறக்கப்பட்டு சென்று வாருங்கள் என கூறி மண மகளையும் அனுப்பி வைத்தார். சென்றவர்கள் அதற்குப் பிறகு எந்தவிதமான தொடர்பும் மணிகண்டனிடம் அவர்கள் வைக்கவில்லை.
மணிகண்டன் பலமுறை போன் செய்தும் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. நான்கு நாட்கள் ஆகியும் ஒரு வாரம் ஆகியும் மணமகள் திரும்பி வராததால் மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மணிகண்டன் விரைந்து வந்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுடைய போன் நம்பரை வைத்து தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருப்பது தெரியவந்தது.
கொழிஞ்சாம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனைவி சபிதா உள்பட உடனிருந்த பெண் மற்றும் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து சித்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் கூறும்போது, "நாங்கள் இதுவரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளோம். அதோடு அவர்களிடம் இருந்து லட்சகணக்கில் பணத்தையும் வசூலித்து கொண்டு தப்பியோடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
அப்படி தான் சேலத்தை சேர்ந்த மணிகண்டனையும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்து, பணம் பறித்தோம். ஆனால் அவர் எங்களை பற்றி விசாரித்து போலீசில் புகார் கொடுத்ததால் மாட்டி கொண்டோம்" என கூறி உள்ளனர்.