மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் வழங்கினார்.
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
Published on

மயிலம்

மயிலம் ஒன்றியம் பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி 122 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதைத் தொடர்ந்து பெரியதச்சூர், தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் மற்று இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சேது நாதன், டாக்டர் மாசிலாமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேஷ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், வக்கீல் அருணகிரி மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com