

ஆம்பூரை அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் வில்வநாதன், குடியாத்தம் அமலுவிஜியன், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.