இலவச சைக்கிள் வழங்கும் விழா

கடையநல்லூரில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
இலவச சைக்கிள் வழங்கும் விழா
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஹஸன்மக்தூம் ஆலிம் சாகிப் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரகுமான் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 178 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நகரமன்ற உறுப்பினர்கள் முகமதுஅலி, நிலோபர் அப்பாஸ், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முகமதுபுகாரி, முன்னாள் பட்டதாரி ஆசிரியர் உதுமான், தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாஹிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com