மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கீழச்செவபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 228 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பள்ளியின் பொருளாளர் அம்மையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம், பழனியப்பன், கிளை செயலாளர் சுந்தரம், செந்தில், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com