மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைஅ மைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
Published on

எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள உலகம்பட்டி, வா.புதூர், கட்டுகுடிபட்டி, கட்டுகுடிபட்டி அரசு மாதிரி பள்ளி, கரிசல்பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிபட்டி ஆகிய 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து சிறப்புரையாற்றினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை வகித்து 511 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மேலும் தனது சொந்த செலவில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கினார். மேலும் பள்ளிகள் வளர்ச்சிக்காக புரவலர்கள் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் வீதம் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் வழங்கினார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எஸ்.புதூர் ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முசுண்டப்பட்டி ஊராட்சி, திருமலைக்குடி கிராமத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணிபாஸ்கரன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பன்னீர்செல்வம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துணை இயக்குனர் சக்திவேல், எஸ்.புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராஜாத்தி சிங்காரம், ஊராட்சி தலைவர்கள் சியாமளா கருப்பையா(உலகம்பட்டி), ஷாஜகான்(கரிசல்பட்டி), அடைக்கலசாமி(முசுண்டப்பட்டி), லெட்சுமி சண்முகம்(புழுதிபட்டி), ஜெயமணி சங்கர்(செட்டிகுறிச்சி), நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com