

பெரம்பலூரில், மாவட்ட அரசுத்துறை ஊர்தி (வாகனம்) டிரைவர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினா. செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத்துறை வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கிட தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.