

சென்னை
தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் நேரற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும். பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கேப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தில் நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவச பயணத்தை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
மகளிர் நலன், உரிமை ஆகியவற்றுடன் திருநங்கை வாழ்வை இணைத்தே சிந்திப்பது திமுக அரசின் வழக்கம், டுவிட்டரில் திருநங்கைகள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு வந்தவர்களுக்கும் நன்றி அவர் தெரிவித்துள்ளார்.