குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடக்கிறது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடக்கிறது
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விருப்பத்தை தெரிவிக்கலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 044-27660250 மற்றும் 94990 55893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com