மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
Published on

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பேஸ் XI (கட்டம் 11) பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com