போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
Published on

சிவகங்கை

கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள குரூப்-1 மற்றும் குரூப்-2 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள சிவகங்கை படிப்பு வட்டத்தில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுனர்கள் bit.ly/tnpscclass என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரை இலவசமாக பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா, விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com