போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெற நாளைக்குள் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி
Published on

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகாலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு பின்வரும் https://forms.gle/jEYiHi3ERZg8LCeC6 இணைப்பில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பணிக்காலியிடங்களுக்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நாளைக்குள் (புதன்கிழமை) நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com