விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று

விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்று வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று
Published on

ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் 300 விவசாயிகளுக்கு 2 தென்னங்கன்று வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் உதவி வேளாண்மைதுறை அதிகாரி கனகா, விவசாயிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com