குன்னம், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

குன்னம், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
குன்னம், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
Published on

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 123 மாணவர்கள் மற்றும் 169 மாணவிகள் என மொத்தம் 292 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கேடயமும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதேபோல் குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com