ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள்

ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள்
Published on

திருப்புவனம்

திருப்புவனத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் 20-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, சக்திமுருகன், மகேந்திரன், சுப்பிரமணியன், சேகர், இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, நகர் நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், ராசு, ரவி, ஷேக்முகமது, முத்துக்குமார், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com