

சென்னை,
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 2022-2023 இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம் பொருந்தும்.