கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.
Published on

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தண்டையார்ப்பேட்டை எம்.என். கண் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மூலம் இலவச கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பைவ் ஸ்டார் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் மற்றும் ரிசர்ஜ் சென்டர் மூலமாக முதல் உதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்பட்டது.

சிகிச்சை முகாமில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், கனரக வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அலுவலக பணிகள் தொடர்பாக வந்திருந்த பொது மக்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com