இலவச கண் பரிசோதனை முகாம்

தேனி போலீஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இலவச கண் பரிசோதனை முகாம்
Published on

தேனி போலீஸ் நிலைய வளாகத்தில், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர். இதில் போலீசார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பலருக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com