இலவச கண் சிகிச்சை முகாம்

சேரன்மாதேவியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பொழிக்கரையில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அப்பலோ பார்மசி, நண்பர்கள் ரத்ததான கண்தான விழிப்புணர்வு குழு சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவு கண்டறிதல் முகாம் நடைபெற்றது. சரவணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் அபினயா கண் பரிசோதனைகளை மேற்கொண்டார். ரத்த அழுத்த பரிசோதனைகளை அப்பலோ பார்மசியினர் செய்தனர். விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு, ஹசினா, ஹெப்சி ஆகியோர் விழி, ஒளி பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாம் மேலாளர் மாணிக்கம் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றி எடுத்து கூறினார். கண்தான விழிப்புணர்வு குறித்து குமரேசன் உரையாற்றினார். ரத்ததானத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிவா பேசினார். முகாமில் சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com