இலவச கண் சிகிச்சை முகாம்

நயினார்கோவில் அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

நயினார்கோவில், 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய பெடரல் பிளாக் கட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நயினார்கோவில் அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாம் கண் டாக்டர்கள் மேகனா கிராந்தி, மகேஸ்வரர் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் பெடரல் பிளாக் மாவட்ட செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ், மண்டப ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பி.கொடிக்குளம் ஆர்.கே.ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இலவச கண் மருத்துவ முகாமில் 340 பேர் கலந்து கொண்டு அதில் 39 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com