முழு ஊரடங்கு பகுதிகளில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு பகுதிகளில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. அதையொட்டி அப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு தயாரித்து விலையில்லாமல் தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்க தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை நாளை முதல் வரும் 30ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com