கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜா தொவித்தார்.
கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை
Published on

கச்சிராயப்பாளையம்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜா தொவித்தார்.

மருத்துவ முகாம்

இந்தியா முழுவதும் பின் தங்கிய ஊராட்சி ஒன்றியங்களை தேர்த்தெடுத்து வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் பின் தங்கிய 506 ஊராட்சி ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டன இதில் கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியமும் ஒன்று. இங்கு ஊரசு வளர்ச்சித்துறை அலுவலர்களுடன், அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து கல்வராயன்மலை ஒன்றியத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் ஊரக வளர்ச்சித்துறையுடன் சுகாதார துறையினர் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கல்வராயன்மலை கரியாலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதற்கு சுகாதார துணை இயக்குனர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலரி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

மாவட்டம் முழுவதும்

தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் நிதயா மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 75 கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை மேற்கொண்டனர்.

இதய குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உயிரிழப்புகளை தடுக்கலாம் எனவும், இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு இலவச இதய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டா ராஜா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com