798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

ரிஷிவந்தியம் தொகுதியை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
Published on

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் யோகஜோதி, பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த 429 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரத்து 75 மதிப்பிலான வீட்டுமனை பட்டா, திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த 369 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 81 ஆயிரத்து 887 மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 உலமாக்களுக்கு சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சரவணன், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், செந்தில்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், நகர செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com