15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதிகளில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு.
15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
Published on

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வாடகை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் 15 பேருக்கு துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில் வீட்டுமனைபட்டா வழங்கப்பட உள்ள இடத்தை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அந்த இடம் நீர்நிலை மற்றும் சாலையோர அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதா என்று அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அரசு அனுமதி வழங்கியவுடன் இலவச வீட்டுமனை பட்டாவை உடனடியாக 15 பேருக்கும் வழங்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com