நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா

நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா
Published on

நெமிலி

நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணபதிபுரம் கிராமத்தில் ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 14 குடும்பத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த் துறையினர் முடிவு செய்து சித்தூர் கிராமத்தில் இடத்தை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து நேற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இருளர் மக்கள் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணை தாசில்தார் முத்துகுமரன், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவலர் உமா, ஒன்றியக் குழு உறுப்பினர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com