இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-. எங்கள் காலனி பகுதியை சேர்ந்த 61 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் 20 பேருக்கு மட்டுமே வீட்டு மனைப்பட்டா வழங்கினர். மீதியுள்ள 41 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. அதேபோல் வீட்டுமனை பட்டா மட்டும் கொடுத்தார்கள். ஆனால் இதுவரை அதற்குரிய இடத்தை அளந்து கொடுக்க வில்லை. எனவே உடனடியாக மீதியுள்ள 41 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மேலும் வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். இது தவிர நரிக்குறவர் இன மக்களுக்காக தனியாக சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com