மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு
Published on

சென்னை,

மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடம் போனஃபைட் சான்றிதழ் பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாதவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட பிறகு, கூடுதலாக தேவைப்பட்டால் டிசம்பர் 17 க்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com